கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி காற்றின் தரக் குறியீட்டின் படி, இன்று கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.
அத்துடன் நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐத் தாண்டியிருப்பதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.