2024ஆம் ஆண்டுக்கான கல்மடுக்குளத்தின் கீழான சிறுபோக கூட்டம்

2024ஆம் ஆண்டுக்கான கல்மடுக்குளத்தின் கீழான சிறுபோக கூட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய காப்புறுதி சபை மற்றும் கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் கூட்டத்தின் மூலமாக கல்மடுக்குளம் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் சிறுபோக  நெற்செய்கைக 2011ல் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
சிறுபோக செய்கையானது கண்டாவளை, கல்மடு, தருமபுரம், நெத்தலியாறு, புளியம்பொக்கணை  போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு  வழங்கப்படுவதாகவும், 50ஏக்கர் சிறுதானியச் செய்கைக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக எதிர்வரும்  05.04.2024க்கு முன்னர் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் எட்டப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews