இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பல் தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுமாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளருடனான இருதரப்பு கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, இலங்கை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்குச் வருவது இதுவே முதல்முறையாகும்.