‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 810 சந்தேக நபர்கள் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  810 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 601 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 209 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 810 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 180 கிராம் 115 மில்லி கிராம் ஹெராயின், ஐஸ் 03 கிலோ 449 கிராம், கஞ்சா 167 கிலோ 690 கிராம், குஷ் 02 கிலோ 172 கிராம், மாவா 213 கிராம் 48 மி.கி, துலே 9 கிராம் 674 மி.கி, மதன மோதக 157 கிராம், 3,183 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 601 சந்தேக நபர்களில் 05 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 18 சந்தேக நபர்களும் இதன்போது  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 209 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 20 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், 182 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகள் மற்றும் 07 சந்தேக நபர்கள் குற்றங்களுக்காக  தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews