நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று தெரிவித்தார்.
இந்த நிலைமை சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் தெருநாய்கள் காணப்படுவதாகவும், இது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சுற்றுலாப் பகுதிகளிலும் இது பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்துள்ளதால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியம் என்றார்.
விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தென்னக்கோன், விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாவற்றிற்கும் முன்னதாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.