ஒன்பது மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆசிரியர் நியமனம் தொடர்பாக நேற்று காலையும் அனைத்து மாகாண ஆளுநர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நான் அது தொடர்பில் கலந்துரையாடினேன்.
விரைவாக மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் நிலவும் வெற்றிடங்களை கவனத்திற்கொண்டு நியமனங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றள என்றார்.