
மகளீர் தினத்தை முன்னிட்டு கர்ப்பவதிகளிற்கு அன்பளிப்பு பொதிகள் இராணுவத்தினரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
55வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் 1500 ரூபா பெறுமதியான அன்பளிப்பு பொருட்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள 30 கர்ப்பவதிகளிற்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் R K N C ஜயவர்த்தன தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, மகளீர் தினத்தை முன்னிட்டு அக்கராயன், பூநகரி, தர்மபுரம், ஜெயபுரம் ஆகிய வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள், வெளிநோயாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
