கொழும்பு- வெள்ளவத்தை, பகுதியில் உள்ள பிரதான வீதியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது.
வீதியின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்த குழி தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் அப்பகுதி பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு சற்று வாகன நெரிசல் காணப்படுகின்றது.
இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகள் லிலீ அவென்யூ கிளை வீதியூடாக கரையோர வீதியில் பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்