நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 537 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 78 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 207 கிராம் 992 மில்லி கிராம் ஹெராயின், 183 கிராம் ஐஸ், 453 மி.கி கஞ்சா, 07 கிலோ 861 கிராம் மாவா, 227 கிராம் 76 மி.கி துலே, 90 கிராம் 480 மி.கி மதன மோதகம், 36 கிராம் 1,966 மாத்திரைகள், மற்றும் 11,011 கஞ்சா செடிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 537 சந்தேக நபர்களில் 21 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 10 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 78 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 07 சந்தேகநபர்களும், 67 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், மேலும் கைரேகைகள் மூலம் கைது செய்யப்பட்ட ஒருவரும் மற்றும் 03 சந்தேக நபர்களும் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.