பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த் திருவிழா நேற்று(8) காலை இடம்பெற்றது.
15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 14 ம் திருவிழாவான இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
காலை 8.00 மணிக்கு ஸ்தம்ப பூசையும் ; 8.30 மணிக்கு வசந்தமண்டப பூசையும் நடைபெற்று நகுலாம்பிகாதேவிசமேதராக நகுலேஸ்வரப்பெருமான பிள்ளையார் மற்றும் முருகன் சமேதராக உள்வீதி திருநடனத்துடன் தேரிலே ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்