
மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் இந்து சமயப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன.
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி, அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்ட சமய வைபவம் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சிவன் கோவிலில் இடம்பெற்றது.
பருத்தித்துறை பசுபதீஸ்வரர் சிவன் கோவிலில் இவ்வருட நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. அப்பகுதி இந்து மக்களுடன் உள்ளூர் இராணுவத்தினர் இணைந்து கொண்டமையால் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
சமய நடவடிக்கைகளுக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்து பக்தர்களுக்கு அப்பகுதி இராணுவத்தினர் உணவு மற்றும் பானங்களுடன் தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.