
இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையிலான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகாரிகள் இன்றையதினம்(09) காலை யாழ் வடமராட்சி பகுதிக்கு விஜயம் மொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது நெல்லியடியில் இடம்பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட குறித்த குறித்த குழுவினர் அங்கிருந்த மாணவர்களிடமும் கலந்துரையாடியுள்ளனர்.
தம்பிக்க பெரேராவின் தகவல் தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி கூடங்களை பார்வையிடுவதன் தொடர்ச்சியாகவே குறித்த விஜயம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.