
நாட்டின் 18 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
மேல், வடமேல், தென், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது