பணிப்புறக்கணிப்பில் குதித்த மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள்..!

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மத்திய தபால் பரிவர்த்தனை ஸ்தாபிக்கப்பட்டுள்ள 8 மாடி கட்டிடத்தில் உடைந்த மின்தூக்கியை சீர் செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய தபால் பரிவர்த்தனையில் பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட சங்கடமாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

லிப்ட் பழுதடைந்து ஒரு வருடமாகியும், அதை சரிசெய்யாததால், கட்டடத்தில் உள்ள தபால் பைகளை நகர்த்துவதற்கு ஊழியர்கள் கடும் சிரமப்பட வேண்டியுள்ளது.

இதனை மறுசீரமைக்க அரசாங்கம் 3 மாத கால அவகாசம் கோருவதாக தெரிவித்துள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, ஒரு மாதத்திற்குள் அதனை மறுசீரமைக்கத் தவறினால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews