
பதுளை, லிதமுல்ல பகுதியில் வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்தபோது குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவரை கைது செய்யதுள்ளனர்.