
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



மீட்கப்பட்ட சடலம் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம்-சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் கானப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடு மேய்ப்பவர்கள், 38ம் கிராமம் வைரவர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வயல் வடிகான் நீருக்குள் துவிச்சக்கரவண்டியும் சடலமும் கிடப்பதனை கண்டு அதனை கிராம மக்களின் ஊடாக வெல்லாவெளி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.