
அமெரிக்கா டொலர் ஒன்றின் பெறுமதி இன்றைய தின வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 76 சதம் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 00 சதம் ஆகவும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 384 ரூபாய் 71 சதம், விற்பனை பெறுமதி 399 ரூபாய் 50 சதம் எனவும், யூரோ ஒன்றின் கொள் முதல் பெறுமதி 328 ரூபாய் 35 சதம், விற்பனை பெறுமதி 341 ரூபாய் 41 சதம் எனவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 01 சதம், விற்பனை பெறுமதி 342 ரூபாய் 56 சதம் எனவும், கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 222 ரூபாய் 17சதம், விற்பனை பெறுமதி 232 ரூபாய் 64 சதம் எனவும் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 232 ரூபாய் 11 சதம் எனவும், அத்துடன் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 12 சதம் எனவும் பதிவாகியுள்ளது.
மேலும் பஹ்ரேன் தினார் 813 ரூபாய் 83 சதம், குவைட் தினார் 998 ரூபாய் 08 சதம், கட்டார் ரியால் 83 ரூபாய் 20 சதம், சவூதி அரேபிய ரியால் 81 ரூபாய் 74 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 83 ரூபாய் 46 சதம் என இலங்கை மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.