
ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஒன்று இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கில், கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் இந்த சொற்பொழிவு இடம்பெற்றது.

இந்திய துணைத் தூதரகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இந்த சொற்பொழிவில், தமிழ்நாடு – கல்வி உளவியலாளர், முனைவர் சரண்யா ஜெய்குமார் அவர்கள் பேச்சாளராக கலந்துகொண்டார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.