
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேன்துறை கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இவர்கள் தமிழ்நாடு மாநிலம் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .