க.பொ.த.சா/த இல் 07 பாடங்கள், 10 ம் தரத்தில் க.பொ.த. சா/த பரீட்சை முதலாவது பரீட்சை 2026 டிசம்பரில் –

க.பொ.த. சா/த பரீட்சை -2026 ல் இருந்து 07 பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் தோற்ற வேண்டும். கணிதம், விஞ்ஞானம், சமயம், தாய்மொழி, வரலாறு, ஆங்கிலம், தகவல்
தொழில் நுட்பம் ஆகிய ஏழு பாடங்களுக்கு
மட்டும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற
வேண்டும்.

தற்போது பரீட்சைப்பெறுபேறுகளில் உள்ள
A,B,C என்ற வகைப்படுத்தல் இன்றி GPA
முறை அறிமுகப்படுத்தப்படும். எந்த ஒரு
மாணவனும் க.பொ.த.உயர்தரவகுப்புகளில்
கற்காதிருக்க முடியாது.

தற்போது 11 ம் தரத்தில் நடாத்தப்படும் GCE
O/L பரீட்சை 2026 ல் 10 ம் தரத்தில் நடாத்தப்
படும். அதற்கேற்ற வகையில் 2025 ல் 09 ம்
தரத்திற்கு வகுப்பேற்றம் செய்யப்படும்
மாணவர்களுக்கு மேற்குறிப்பிட்ட 07 பாடங்
கள் மட்டுமே வகுப்பில் கற்பிக்கப்படும்.இதே
போல் க.பொ.த. உயர்தர பரீட்சை 12 ம் வகுப்
பில் நடாத்தப்படவுள்ளது. இப்பரீட்சை 2027ல்
ல் நடாத்தப்படவுள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படை
யிலான முதலாவது பொதுப் பரீட்சையான
க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2026 ல்
நடாத்தப்படவுள்ளது. இத்தகவலை கல்வி
அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர்
குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews