
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த காலத்தில் 12 சதவீதமாக இருந்த வற் வரி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின்படி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
எவ்வாறாயினும், வற் வீதம் 3 சதவீதம் குறைக்கப்பட்டால், வருடாந்த வற் வரி வருமானம் சுமார் 300 பில்லியன் ரூபாவால் குறையும் என நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.