
பண்டிகை காலத்தையொட்டி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி மாத்தில் 48.5 சதவீதமாக காணப்பட்ட வேலைவாய்ப்பு வீதம் பெப்ரவரி மாதத்தில் 51 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், பெப்ரவரி மாதத்தில் பணிகளுக்கான இலங்கை கொள்வனவாளர் முகாமையாளர் சுட்டெண் 53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அத்தோடு, போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகளின் துணைத் துறைகளிலும் மேம்பாடுகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.