இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோர நாடாளுமன்ற பேரவை தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம், பதிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளிலிருந்து விண்ணப்பங்களைக் கோர பேரவை முடிவு செய்துள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரவையின் இணையவழி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, வார இறுதி மற்றும் வார நாட்களில் மூன்று மொழிகளில் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிடவும், விண்ணப்பங்களை அனுப்ப 2 வாரக் கால அவகாசம் வழங்கவும் பேரவை முடிவு செய்துள்ளது.