
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்றுக் காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.