அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா விதிமுறைகள் இந்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்ததையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதேவேளை குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், வீடுகளின் வாடகை மற்றும் இடப்பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஆங்கிலமொழி தொடர்பான அறிவு முன்பு எதிர்ப்பார்க்கப்பட்டதை விட சிறந்த அளவில் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சர்வதேச மாணவர்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவர்களின் கல்வி செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.