காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கண்டவளை பகுதியில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெளிக்கண்டல் பகுதியில் நேற்றைய தினம் 21.03.2024 இரவு மக்கள் குடியிருப்புகள் புகுந்த மூன்று காட்டு யானைகள் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த 7 தென்னை மரங்கள் மற்றும் பயன்தரக்கூடிய நிலையில் இருந்த 40 க்கும் மேற்பட்ட வாழைகளை அழித்துள்ளது.
இதேவேளை, யானையை விரட்டுவதற்காக அயலவர்களின் உதவியுடன் பல மணி நேரம் போராடிய பின்னரே யானையை விரட்டியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யானை வெடியினை தந்ததவு மாறும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நட்டயீட்டினை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.