
கொழும்பின் பகுதிகளில் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுதும் அழகு சாதனை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.
பெண்கள் தங்களை அழகுபடுத்தும் நோக்கில் ஆபத்தான கிரீம்களை பயன்படுத்துவதால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘Chandni’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் கிரீம்களில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் எனும் மூலப்பொருளும் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இலங்கை சந்தையில் சூட்சமமாக விற்பனை செய்யப்படுகின்றன.
கொழும்பிலுள்ள பிரபல அழகுக்கலை நிலையங்களில் இவ்வாறான கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.