
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திஇஈர விபத்து சிகிச்சை பிரிவு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து அரசின் இலகு கடன் திட்டத்தின் கீழ் நான்கு பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த தீவிர விபத்து சிகிச்சை பிரிவே இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

வடக்கு மாகாண பதில் சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குறித்த விபத்து சிகிச்சை பிரிவை திறந்துவைத்தார். அவருடன் சுகாதார இராஜாங்க அமைச்சர், மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுநர் BSM சார்ல்ஸ், அமைச்சர் மஸ்தான், ஜனாதுபதியின் பித்தியேக செயலாளர் சாகல ரத்தநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் சித்யார்த்தன், வடக்கு அவைத் தலைவர் சி.வீ கே.சிவஞானம், இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர், வடக்குமாகாண அதிகாரிகள், வடக்கு மற்றும் மத்திய சுகாதார அதிகாரிகள், மத தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
