
வருடாவருடம் மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர்தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது.
இவ்வருடம் மாணவர் மத்தியில் அமைதிக்கான நீர் என்ற கருப்பொருளுக்கு அமைவாக நீரின் முக்கியத்துவத்தையும், நீரைப் பேணல் முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் எதிர்காலத்திற்குரிய சுற்றுச்சூழல் அமைப்பினருடன் இணைந்து கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயம் பல்வேறு போட்டிகளை மாணவர் மத்தியில் ஏற்பாடுசெயது நடத்தி வெற்றிபெற்ற மாணவர்களினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ் நீர்தின நிகழ்வு இன்று(22) பாடசாலை முதல்வர் திலீபன் தலைமையில் பாடசாலைப் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நீர்ப்பாசனத்துறைப் பெறியியலாளர் எந்திரி S. சர்வராஜாவும். கௌரவ விருந்தினர்களாக எந்திரி அ.சுந்தரேசன் மற்றும் இயற்கை ஆர்வலர்களான சசிகரன், அருந்தவம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவருக்கு விருந்தினர்களால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவரின் பல்வேறு கலை நிகழ்வுகழும் இடம்பெற்றன.

இன் நிகழ்விற்கான அனுசரணையை எதிர்காலத்திற்குரிய சுற்றுச்சூழல் அமைப்பினர் வழங்கியிருந்தனர்