பாண் விற்பனை செய்யும் நபர்களும் புலனாய்வு தகவல்களை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் ஜாஎல பொல்பிட்டிய புனித நிக்கலோஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் திகதி தகவல் வழங்கப்பட்டிருந்தது. இந்த தகவல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எங்களுக்கு பாண் விற்பனை செய்பவர்களும் தகவல்கள் வழங்குகின்றனர். இந்த எந்தவொரு தகவல்களையும் தேவையில்லை என கருத முடியாது. இந்த தகவல்களை ஆராய்ந்து புலனாய்வு தகவல்கள் வேறுபடுத்திக் கொள்ளப்படுகின்றன. நாம் யாரையும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் கண்டேன் இவ்வாறான பேச்சுக்களும் வெளியிடப்பட்டதனையும் நான் அவதானித்தேன் என கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.