
குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் இன்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது.
அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று குருத்தோலை ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்முகமாக இன்று (24) கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திலும் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டது.