
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தான் அறிவதாக அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம், மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை அடுத்து வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத் தந்துள்ளார்.