
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(25) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்குப் பொது மக்களின் உதவியைப் பொலிஸார் கோரியுள்ளனர்.