
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார்.
சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதிற்கடமை தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவின் முன்னணி வருடாந்த சர்வதேச மாநாடான போவா மாநாட்டின் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று மாலை சீனாவின் பெய்ஜிங் பயணமானமை குறிப்பிடத்தக்கது.