
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 20.03.2024 அன்று கர்மாரம்பம் விநாயக பூஜையுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்று நான்கு கோபுரத்துக்குகான கலச கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று காலை 05.10 மணியளவில் சகல நான்கு பக்ககோபுர கலச மஹாகும்பாபிஷேகம் இனிதே இடம்பெற்றது.

பின் பாரிவார மூல மூர்த்திகளுக்கான மஹாகும்பாபிஷேகம் காலை 07.மணிக்கு இடம்பெற்றதுடன் 08.40 முதல் 09.30 மணியில் சுபவேளையில் கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பல பாகங்களில் இருந்துவருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். மஹாகும்பாபிஷேகத்தினை தொடர்ந்து எதிர்வரும் 48 நாள் மண்டலாபிஷேக உற்சவம் இடம்பெறும் குறிப்பிடதக்கது.
