பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – நாரஹேன்பிட்ட சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ‘2024 பாடசாலை உணவுத் திட்டம்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமின்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளோம்.
நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்படி, பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.