பருத்தித்துறை சாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தனியார் வாகம் செலுத்திக்கொண்டு சாலையிலிருந்து மாத வருமானத்தை பெற்று வருவதாகவும், அவர் ஊழியர்களின் நலனையோ, சாலையின் முன்னேற்றத்திலோ பங்கு கொள்ளாமல் செயற்படுகின்றார் எனக் குற்றம் சுமத்தியும் இன்று காலை 9:00 மணிக்கு பருத்தித்துறை சாலை வளாகத்தில் இடம் பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்திலேயே இவ்வாறு சுலோகம் ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை சாலையை விட்டு அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுருந்த அதே வேளை இலங்கை பொறியியல் ஊழியர்கள் சங்கம் பருத்தித்துறை சாலையில் பணியாற்றும் இயந்திர திருத்துனர் ஒருவரது கடமையில் திடீரென மாற்றம் செய்ததாகவும், அது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை எனவும், குறித்த விடயம் தொடர்பில் சாலை அத்தியட்சகரை அலுவலகத்தில் சந்திக்க முற்பட்டபோது அவர் சந்திக்க மறுத்து தனது உந்துருளியில் சாலையிலிருந்து வெளியேறி செல்ல முற்பட்டதாகவும், இதனால் தாம் வழிமறித்து அவரிடம் கதைக்க மீண்டும் முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் தமக்கு இந்த உருளியால் மோதிவிட்டு சென்றுள்ளதாகவும், இதனால் ஒருவர் காலில் சிறு காயத்திற்கு உட்பட்டதாகவும் இது தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுத்ந்திர பொறியியல் சங்க பிரதிநிதிகள் எமக்கு தெரிவித்தனர்.
அதே வேளை பருத்தித்துறை சாலை அத்தியட்சகரும் தனது கடமைக்கு இடையூற விளைவித்டாக காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
பருத்தித்துறை சாலை முகாமையாளர் பல பணியாளர்களை பழி வாங்குவதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், அவர் அதஸதியட்சகருக்கு தகமை இல்லாதவர் என்றும் சுதந்திர பொறியியல் சங்கத்தினர் தெரிவித்தனர்.