கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023 ஆம் ஆண்டு Save the Children நிறுவனத்தால் வழங்கப்பட்ட (Smart Board, Camera, Party Box Set opgebe பொருட்கள் கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் குறித்த வேலைகத்தின் கணக்காளர் மாகாண கல்வித் திணைக் களத்துக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது குறித்த அன்பளிப்புப் பொருட்களை இருப்பு புத்தகத்தில் பதிவு செய்வதற்காக களஞ்சியத்தில் ஒப்படைக்குமாறு நிதி உதவியாளர் களஞ்சியக் காப்பாளர் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரிடம் பணித்திருந்தார்.
அதற்கமைய NP/45/02/SK/10/001 இலக்க 04.07.2004 திகதிய கடிதம் மூலம் குமரன் ஆசிரிய ஆலோசகர், தகவல் தொழிநுட்பம் அவர்களை குறித்த பொருட்களை களஞ்சியத்தில் ஒப்படைக்குமாறு கேட்டிருந்தேன் .
தற்போது எமது அலுவலகத்தின் வருடாந்த இருப்பு கணக்கெடுப்பின் கள ஆய்வின் போது குறித்த பொருட்கள் எவையும் அலுவலகத்தில் காணப்படவில்லை.
இது தொடர்பாக சேவைக்கால ஆசிரிய ஆயோசகரான திருக்குமரன் அவர்களிடம் கேட்டபோது அவை தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லை எனவும் இது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் Save the Children நிறுவன இணைப்பாளர் சுரேஸ்குமார் என்பவரிடம் வினவிய போது. வலயக்கல்விப் பணிப்பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி தன்னிடம் சில பொருட்களை ஒப்படைத்துள்ளார் என்பதை தெரிவித்தார்.
இது தொடர்பான தங்களின் ஆலோசைைலயயும் அறிவுறுத்தலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து எழுத்து மூலமாக கடிதத்தை மாகாண கல்வித்தினை களத்திற்கு அனுப்பியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதியை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வேலையத்துக்கு தம்மால் பொருட்கள் வழங்கப்பட்டது உண்மை எனவும் அது ஏன் வரவு புத்தகத்தில் பதியப்படவில்லை என்பது தொடர்பில் வலயக் கல்வி திணைக்களம் தான் கூற வேண்டும்.
கடந்த மூன்று கிழமைக்கு முன்னர் குறித்த பொருட்களை மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எமது தலைமைக் காரியாலயத்துடன் கலந்துரையாடி வேறு பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். 27