
கோட்டை நீதிவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அமைச்சர் டிரான் அலஸ் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
நீதிவான் திலின கமகேவை கொல்வதற்காக ஒருவர் தொலைபேசி ஊடாக துப்பாக்கியை கோரியுள்ளதாக அரச உளவாளி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபரின் தொலைபேசி இலக்கங்களுடன் விபரங்களை உளவாளி வழங்கியுள்ளதுடன் அந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.