
சுமார் 64 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட வர்த்தக வரி நீக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இந்த வரியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
210 HS குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 64 வகையான பொருட்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.