சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை சஜித் பிரேமதாச நேரடியாக பெற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தின் ஒருவரைக் கூட அவரால் வெற்றிக்கொள்ள முடியாமல்போனது.
மார்ச் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லங்காதீப சிங்கள பத்திரிகையில் விஷேட செய்தியில், எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரிஎல்ல, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் பிரேமதாச கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 117 வாக்குகளை வழங்கி 42 மேலதிக வாக்குகளால் சஜித் தரப்பு தோற்கடிக்கப்பட்டனர்.