தரம் குறைந்த மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவரது மகள் சமித்ரி ரம்புக்வெல்ல மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து சமித்ரி ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் நான் அறிந்த சட்டத்தின் பிரகாரம், நபர் ஒருவர் கைது செய்யப்படுவரானால் விசாரணையின் பின்னரே கைது செய்யப்பட வேண்டும்.
ஆனால் எனது தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக விசாரணை நடத்தி நீதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளேன் என சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்