கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு வாயில் சிவப்பு புள்ளிகள் அல்லது மூட்டுகளில் வெள்ளை நீர் கொப்புளங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் இது ஒரு வைரஸ் நோய் என்பதினை பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நோய் அறிகுறிகள் தென்படும் போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாடசாலை, முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தொற்று சுமார் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இதற்கு பரசிட்டமோல் மாத்திரைகள் அல்லது பரசிட்டமோல் சிரப் என்பன பரிந்துரைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தூசி நிறைந்த சூழல் காரணமாக ஆஸ்துமா மற்றும் இருமல் தொற்று குழந்தைகளிடையே அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.