
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.