
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடமாடும் சேவையில் காலம் கடந்த இறப்பு,
காலம் கடந்த பிறப்பு,
திருமணப்பதிவு
அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளல், பொலிஸ் நற்சான்று பத்திரம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. அத்துடன் இந்த நடமாடும் சேவையில் இரண்டு சட்டத்தரணிகளால் சட்ட ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இதில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர் சட்டத்தரணி திருமதி அம்பிகா, சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் உத்தியோகத்தர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


