அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது நேற்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பகியது.
மாணவர்களின் அணிநடை நிகழ்வு, அஞ்சல் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், மாணவர்களின் இடைவேளை நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வீர வீராங்கனைகளுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் திரு.கு.பாலமுருகன் அவர்கள் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் கல்வி விளையாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.ந.திருலிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கலாநிதி ஈ.எஸ்.பி.நாகரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், திரு.பா.பாலச்சந்திரன் (சிற்பாசாரி) அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.