இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காண வேண்டும்.
குறிப்பாக 13ஆவது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும் என பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம தெரிவித்துள்ளார்.
மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு – கிழக்கில் படையினர் ஆக்கிரமித்த பொதுமக்களின் காணிகளை மீளவும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நஷ்டஈட்டை வழங்க வேண்டும்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நேர்மையாக தெரிவிக்க வேண்டும்.
சட்டவிரோதமான சட்டங்களை இல்லாது ஒழிக்க வேண்டும்.
இந்த நாடு ஜனநாய நாடு என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.
மலையக மக்களின் காணி உரிமை – வீட்டுரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்தி உத்தரவாதப்படுத்த வேண்டும் என பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம தெரிவித்துள்ளார்.