தேர்தல் இப்போதைக்கு இல்லை…!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமை தொடர்பில் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்தபோதே நாட்டில் நடத்தவேண்டிய குறித்த தேர்தல்கள்  பற்றி குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவர், நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமாகும். எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் நிதியளிப்புச் செயற்பாட்டின் பின்னரே வருகின்றது.

எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது.

அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews