நெதர்லாந்து நாட்டின் இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரமாகும்.
இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளனர்.
அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
தகவலறிந்த அங்கு விரைந்து வந்த பொலிஸார் அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
தொடர்ந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிணைக்கைதிகள் அனைவரும் குறித்த விடுதியில் வேலை செய்யும் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தின் தப்பியோடுவதற்கு முற்சித்த பிரதான சந்தேகநபர் மற்றும் அதற்கு உடந்தையானவர்கள் என சந்தேகிக்கும் மூவர் கைது செய்யப்பட்டனர்.