இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணியினால் சர்வதேச மகளீர் தினம் நேற்று மாலை 3 மணியளவில் வட்டுக்கோட்டை மூளாய் வீதியில் அமைந்துள் சிறி கணேச வாசிகசாலை மண்டபத்தில் முன்னாள் தவிசாளரும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணி செயற்றபாட்டளருமான நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்பொழுது வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள மகளீர் சங்கத்தின் உறுப்பினர்கள் , வட்டுக்கோட்டை தொகுதியின் தாய்மார் கழகங்களின் உறுப்பினர்கள்,முன்பள்ளி ஆசிரியர்கள்,60 வயது கடந்த நிலையில் முன்பள்ளி சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும்சான்றிதழ் வழங்கும் உன் வைபவமும் பிரதம விருந்தினராக கலந்து சிற்பபித்த கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யசோதா சரவணபவன் மற்றும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் வழங்கி கௌரவிக்கபட்டது.
தொடர்ந்து பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவிகளால் சிறிதேவி கண்ணதாசன் அவர்களின் நெறியாள்கையுடன் சிறப்பு நடனமும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முதல்வர் லலீசன் ,உதய வாழ்வு வாழ்க்கை திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் யசோதா சரவணபவன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணி தலைவி சுதாரஞ்சி ,முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி ,மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி , அம்பிகை ,மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் ,முன்பள்ளி ஆசிரியர்கள்,தாய்மார் கழகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்